ரூ.3.23 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி & குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் குப்பம் மதனப்பள்ளியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சந்தானம் என்பவர் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 402 மதிப்பிலான 76 பட்டுபுடவைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
இதே போல், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும்படை அலுவலர் ரத்தினம் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 ஆயிரத்து 500 மதிப்பிலான குக்கர் உள்ளிட்ட உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu