பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏ., தொடங்கி வைப்பு

பர்கூர்  பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏ., தொடங்கி வைப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்த மதியழகன் எம்எல்ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழாவை மதியழகன் எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் சொந்தமான காலி இடங்களில் கலைஞர் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.

கோவில் மலையில் உள்ள காலி இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கலைஞர் தலமரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ், கோவில் காலி இடங்களில் வேப்பமரம், கடம்பம், ஆத்தி, நாவல், பாதம், அரசமரம் உள்ளிட்ட தலமரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும் என்றார்.

இணை இயக்குநர் கூறும் போது, கிருஷ்ணகிரி, திருவண்ணமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் பாலன், இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை பர்கூர் சரக ஆய்வாளர் அண்ணாதுரை, செயல் அலுவலர் கிருஷ்ணன், கோவில் பூசாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததால் ஆர்ப்பாட்டம்..!