போலியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரிப்பு-வாலிபர் கைது

போலியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரிப்பு-வாலிபர் கைது
X
பர்கூரில் போலியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரிப்பு ஆன்லை டிக்கெட் புக்கிங் ஆபிஸ் நடத்தி வந்தவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் பர்கூரில், திருப்பத்தூர் சாலையில் லட்சுமிகணபதி ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் ரயில், விமானம் மற்றும் சொகுசு பேருந்து போன்றவற்றிற்கு டிக்கெட் புக்கிங் செய்து கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் இவர் போலியாக கொரோனா நெகட்டிவ் என பயணிகளுக்கு சான்றிதழ் தயாரித்து, அரசு மருத்துவர் கையெழுத்து, அரசு மருத்துவமனை சீல் போன்றவற்றை வைத்து கொடுத்து வந்துள்ளார்.

குறிப்பாக பர்கூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்பதால் இவ்வாறு போலி சான்றிதழ் தயாரித்து டிக்கெட் புக் செய்து கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர். கலையரசி பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவுவழக்கு பதிவு செய்து, தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil