பர்கூரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பர்கூரில்  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்    ஆலோசனை கூட்டம்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேலல்நிலைப்பள்ளியில், புதியதாக பொறுப்பேற்றுள்ள பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மலர்விழி தலைமை வகித்தார்.

திமுக பேரூர் செயலாளர் பாலன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் வினோத்குமார், செயலாளர் பழனி, துணை செயலாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஜான் ஏசுதாஸ், செல்வம் குமரேசன் தேவி, மஞ்சுளா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிடிஏ தலைவர் இளங்கோ, வெங்கட்டப்பன், சந்திரன், நந்தியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பள்ளி மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்தும், கூடுதல் ஆசிரியர் நியமனம், பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ai in future education