புதிய உழவர்சந்தைக்கு இடம் தேர்வு: மதியழகன் எம்எல்ஏ ஆய்வு
பர்கூரில், புதியதாக உழவர்சந்தை அமைப்பதற்கான இடத்தை மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்கு உழவர் சந்தை அமைத்துக் கொடுக் வேண்டும் என்று நீண்ட நாள் கோரி வந்தனர். இதை ஏற்று, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், பர்கூரில் உழவர் சந்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
இடங்களை தேர்வு செய்ய பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதியாக பர்கூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள இடத்தில் உழவர்சந்தை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையம் அருகில் உள்ள இடத்தில் உழவர்சந்தை அமைக்கலாம் என பொதுமக்கள் ஒப்புக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வாதாக உறுதியளித்தார். இதையடுத்து விரைவில் பர்கூரில் புதியதாக உழவர் சந்தை துவங்கப்படும் என தெரிகிறது. ஆய்வின் போது, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொருளாளர் ராஜேந்திரன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu