பர்கூர்: இருளர் காலனி பகுதியில் எம்எல்ஏ நேரில் ஆய்வு

பர்கூர்: இருளர் காலனி பகுதியில் எம்எல்ஏ நேரில் ஆய்வு
X

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூர் இருளர் காலனி பகுதியில் மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூர் இருளர் காலனி பகுதியில் மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், தனது தொகுதிக்குட்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூர் இருளர் காலனி பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மழையினால் சேதமடைந்த குடியிருப்புகளை பார்வையிட்ட அவர், அவற்றை சீர்செய்ய உரிய நடிவக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அப்போது, தங்கள் பகுதியில் சீரான குடிநீர், மின்சாரம், கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை என்பதை பொதுமக்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து, கிராம வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வரவழைத்தும், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், இந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அஞ்சூர் நாகராஜ், ஜெகதேவி ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி மற்றும் ஊராட்சி செயலாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
future of ai in retail