பர்கூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக லியோனி கிராமம், கிராமமாக பிரசாரம்

பர்கூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக லியோனி கிராமம், கிராமமாக பிரசாரம்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் மதியழகனை ஆதரித்து லியோனி கிராம்,கிராமாக பிரசாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளாரான மதியழகனுக்கு திறந்தவெளி ஜீப்பில் லியோனி சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

பர்கூர் தொகுதியில் போச்சம்பள்ளி தாலுகாவை சேர்ந்த வடமலைபட்டி,சந்தூர், வெப்பாலம்பட்டி, உள்ளிட்ட இடங்களில் பேசிவிட்டு போச்சம்பள்ளி பேருந்து நிலையம் வந்த லியோனி வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பட்டிமன்றம் பேசி முடித்து நான் செல்லும் போது எனக்கு 20 உள்ளாடைகளை வழங்குவார்கள். இதனால் தினமும் உடை உடுத்தும்போது பர்கூரை நினைக்காமல் வெளியில் செல்வதில்லை,அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தம்பி மதியழகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

காவலர்களை அரைகால் சட்டையிலிருந்து முழுகால் சட்டைக்கு மாற்றியதும் திமுக ஆட்சிதான் தான். ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் நான். என்னுடன் பிறந்தவர்கள் என 10 பேர்.

என்னை ஆசிரியராக உயர்த்த என் சமூகத்தை சேர்ந்தவர்கள் படித்தவர்களாக இன்று வலம் வர காரணம் திமுக கட்சியும் தலைவர் கருணாநிதியும் தான். எனவே உங்கள் வாக்கை உதய சூரியன் சின்னத்தில் அளித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!