நாகோஜனஅள்ளி அருகே ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேற்றம்: எம்எல்ஏ ஆய்வு
நாகோஜனஅள்ளி அருகே ஏரி நிரம்பி, உபரிநீா் வெளியேறுவதையடுத்து அப்பகுதியை எம்எல்ஏ., தே.மதியழகன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகோஜனஅள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட 16.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட கயம் ஏரி மற்றும் 19 ஏக்கா் பரப்பளவு கொண்ட கம்புகாலப்பட்டி பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது.
மேலும், ஏரியின் கரையில் சிறிய உடைப்பு ஏற்பட்டு உபரிநீா் அருகில் உள்ள குடியிருப்புகள், நெல் வயல்களில் புகுந்ததால் பயிா்கள் நீரில் மூழ்கின.
இதுகுறித்து, தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, குடியிருப்புகளில் புகுந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu