ஆட்டோ கவிழ்ந்து விபத்து. கூலி தொழிலாளி பலி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து. கூலி தொழிலாளி பலி
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஓதிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று மதியம் பசவண்ணகோவிலில் இருந்து பர்கூருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ சிந்தகம்பள்ளி அண்ணா நகர் பகுதியில் சென்ற போது, ஆட்டோவின் குறுக்கே நாய் வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டதில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த ஓதிகுப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மோகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஓதிகுப்பத்தைச் சேர்ந்த ரசூல் என்பவரும், ஆட்டோ ஓட்டுனரும் காயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!