கூடுதல் பள்ளி கட்டடத்தை ஐவிடிபி நிறுவனர், பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்
கான்கார்டியா பள்ளிக்கு புதிய வகுப்பறைகளை கட்டிக்கொடுத்த ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் மற்றும் தலைமை ஆசிரியை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடடத்தை ஐவிடிபி நிறுவனர், பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியாக பல ஆண்டுகளாக கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நிதியுதவி வழங்கிட ஐவிடிபி நிறுவனரை அணுகி கேட்டனர்.
அதை ஏற்று முதல் தளத்தில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஐவிடிபி நிறுவனம் ரூ. 11 லட்சம் நிதியுதவி வழங்கி, பகுதியளவே கட்டப்படடிருந்த வகுப்பறைகளை முழுமையாக கட்டுமானம் செய்து வழங்கியது. இதன் மூலம் வரும் கல்வியாண்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் அப்பள்ளிக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகளை ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ், பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குளோரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதுவரை இப்பள்ளிக்கு ஐவிடிபி நிறுவனம் கணினி ஆய்வகம், குடிநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு கல்விப்பணிகளுக்காக ரூ. 18.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu