/* */

சசிகலாவை அதிமுகவில் இணைக்க நினைப்பது ஊடகங்கள்தான்: கே.பி முனுசாமி

சசிகலாவை அதிமுகவில் இணைக்க தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் நினைக்கவில்லை; ஊடகங்கள்தான் நினைக்கிறது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சசிகலாவை அதிமுகவில் இணைக்க நினைப்பது ஊடகங்கள்தான்: கே.பி முனுசாமி
X

கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விருப்பமான வினியோகம் இன்று துவங்கியது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி விருப்பமனு வினியோகத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை கேபி முனுசாமி சந்தித்தார். அப்போது, சசிகலா அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக தலைவர்கள் நிர்வாகிகள் ஒன்றரை கோடி தொண்டர்கள் யாரும் இதைப் பற்றி நினைக்கவில்லை நினைக்காத ஒரு விஷயத்தை ஊடகங்கள் ஏன் ஞாபகப்படுத்துகிறது.

ஊடகங்கள் நாங்கள் நினைக்காதது போல் நீங்கள் மறந்துவிட வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சிறிது காலம் தொலைபேசியில் பேசினார். தற்போது கல்வெட்டு மூலமாக பேசி வருகிறார். சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. திருமதி சசிகலா உண்மையாக ஜெயலலிதா மீது பற்று பாசம் இருந்தால் இந்த இயக்கத்தை வாழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மழைநீர் கால்வாய்கள் புனரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெறப்பட்ட நிதி ஊழல் நடந்திருப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முனுசாமி தமிழக முதலமைச்சர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது கடந்த கால ஆட்சி இந்தியாவில் முதன்மை மாநிலம் என பல விருதுகள் பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் குற்றம் சாட்ட கூடாது. தன்னால் முடியவில்லை என்று வரும்போது எதிரிகள் மீது குற்றம் சுமத்துவது சராசரி மனிதனின் குணம்.

ஆனால் முதலமைச்சர் சராசரி மனிதர் அல்ல அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள் வழங்கிய அந்த பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இடம் வழங்கியுள்ளனர். அவர் அதனை செய்ய வேண்டும்.

அதை விடுத்து எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு நீங்கள் நீங்கள் எதிர்ப்பு ஒதுங்கி விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியவர், கடந்த ஆட்சியில் 24 மணி நேரத்தில் மழை நீர் வெளியேற்றப்பட்டது.

மிகப் பெரிய புயல் நேரங்களில் ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஒரே நாளில் கடலூர் சாலை புனரமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இணக்கமான ஒத்துழைப்பு இல்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தான் தற்போதும் உள்ளனர். ஆனால் ஏன் பணிகள் செயல்படுத்த முடியவில்லை என்றால் வழி நடத்தக்கூடிய திறமை இந்த ஆட்சிக்கு இல்லை என குற்றம்சுமத்தினார்.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. நல்ல சிந்தனை உள்ள தலைவராக எதிர்க்கட்சிகளை மதிக்க கூடியதாக இருந்தால் ஜெயலலிதா இந்த நாட்டிற்கு பல்வேறு அர்ப்பணிப்பான பணிகளை செய்திருக்கிறார்கள் என கருதி மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன்.

அதிமுக எனும் இயக்கம் எப்படி கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது அதேபோல் தற்போது தலைமை ஏற்று இருக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கடந்த தலைவர்களைப் போல் இவர்களும் வழிநடத்திச் செல்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் கே ஏ செங்கோட்டையன் அதிமுக வழிகாட்டு குழு கூட்டத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என்கிற கருத்து தொடர்பான கேள்விக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களது கருத்துக்களை சொல்ல முழு அதிகாரம் உள்ளது. அது போல் அவர் தனது கருத்தை கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.

Updated On: 26 Nov 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு