அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்
X
உரிய நடவடிக்கை எடுத்து, மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகள், கடைகள், குடிசை தொழில் செய்யும் நிறுவனங்கள் பெருமளவில் செயல்பட்டு வருகிறது. இதில் போச்சம்பள்ளி -செல்லம்பட்டி சாலையில் பாக்கியம் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் என்ற தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், மளிகை கடைகள், நொறுக்கு தின்பண்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை குறைந்த ஊதியம் கொடுத்து பணியில் அமர்த்தியுள்ளனர் எனசமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது, இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனரா என்று ஆய்வு நடத்த வேண்டுமெனவும், குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது குற்றம். அத்தகைய குற்ற சம்பத்திற்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கி கூறி கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற வாசகத்தை எழுதி ஒட்ட வேண்டுமெனவும், இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story