அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய பாடுபடுவேன் பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன்

அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும்   சென்றடைய பாடுபடுவேன் பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன்
X
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய பாடுபடுவேன் என்று பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி, பாகிமானூர், மஜீத்கொல்லஅள்ளி, ஐகுந்தம்கொத்தப்பள்ளி, ஐகுந்தம், தொகரப்பள்ளி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் எண்ணற்ற திட்டங்களை தலைவர் அறிவித்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளார். டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக சென்று வரலாம் என்பது போன்ற பல்வேறு திட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே சிறந்த தமிழகத்தை உருவாக்க முடியும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சேர நான் உறுதுணையாக இருப்பேன். இந்த தொகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

சாலைகள் அனைத்தும் சீரமைத்து தரப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!