கிருஷ்ணகிரி: தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை பயிற்சி

கிருஷ்ணகிரி: தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை பயிற்சி
X

அவதானப்பட்டி படகு இல்லத்தில் ஒத்திகை மேற்கொண்ட தீயணைப்புத்துறையினர்.

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி படகு இல்லத்தில், தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது

கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தின் சார்பில், எதிர்வரும் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு எச்சரிக்கை நடவடிக்கையாக, ஒத்திகை பயிற்சி அவதானப்பட்டி படகு இல்லத்தில் நடந்தது.

ஒத்திகை பயிற்சியில், தீயணைப்பு மீட்புப்பணி நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில், தீயணைப்புப் பணியாளர்கள், ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில் பருவமழையின்போது நீர் நிரம்பி வரும் சூழலில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஒத்திகைப்பயிற்சி செய்து காண்பித்தனர்.

மேலும் தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றவும், நீரில் அடித்துச் செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், போலி ஒத்திகை பயிற்சி செய்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பருவமழை காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future