விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
X

சித்தரிக்கப்பட்ட படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்ட, கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு; இவர்கள், தனது நண்பர்களுடன், ஏ.நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே, கடந்த 28ம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஏ.நாகமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி பழனிகுமார் மற்றும் கிராமத்தினர் சிலர், விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் போய், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கூட்டமாக சேர்ந்து விளையாடுகிறீர்களே, இது ஆபத்தானது. மேலும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தொற்று மேலும் பரவாதா? என்று கேட்டுள்ளனர்.

இப்படி கேட்டதால் ஆவேசமடைந்த இளைஞர்கள், அதெல்லாம் நீங்கள் கூறக்கூடாது எனக்கூறினர். ஆத்திரத்தில், வெங்கடேஷ் மற்றும் அன்பு உள்ளிட்டோர், கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு பழனிகுமார் உள்ளிட்டோரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனிகுமார், கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புகாரின் பேரில் நேற்று வழக்குபதிவு செய்த பர்கூர் போலீசார் அன்புவை கைது செய்தனர். வெங்கடேசை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்