நிலத்தகராறில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை: தாய் உட்பட 5 பேர் கைது

நிலத்தகராறில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை: தாய் உட்பட 5 பேர் கைது
X

கொலை செய்யப்பட்ட எலக்ட்ரீசியன் சுகுமார்

பர்கூர் அருகே நிலத்தகராறில் எலக்ட்ரீசியன் மண்வெட்டியால் அடித்து கொலை செய்த வழக்கில், தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பண்டசீமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார், எலக்ட்ரீசியன். இவருக்கும், இவரது உறவினர் சுப்பிரமணி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு பண்டசீமனூர் பகுதியில் உள்ள சுகுமார் வீட்டிற்கு சென்ற அவரது தாய் கௌரி என்கிற கௌரம்மா, அவரது உறவினர்களான சுப்பிரமணி, திம்மராயன், ராமன், லட்சுமணன் ஆகிய 5 பேரும், நிலப்பிரச்சனை பற்றி பேசியுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஐந்து பேரும் சுகுமாரை மண்வெட்டி மற்றும் இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்டவைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் சுகுமார் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை சுகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி விசாரணை நடத்தி, சுகுமாரின் தாய் கெளரம்மாள் சுப்பிரமணி திம்மராயன் ராமன் லட்சுமணன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!