திமுக வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு

திமுக வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு
X
பர்கூர் தொகுதியில் போட்டியிடும்' திமுக வேட்பாளர் மதியழகனுக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன், பர்கூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளர்ர். ஒரப்பம் கிராமத்தில் துவங்கி, பாலிநாயனப்பள்ளி, அச்சமங்கலம், கந்திகுப்பம், சூலாமலை, அஞ்சூர், பாலேப்பள்ளி, வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, சின்னமட்டாரப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், ஒப்பதவாடி, மல்லப்பாடி, சிகரலப்பள்ளி, பட்லப்பள்ளி, பண்டசீமனூர், பெருகோபனப்பள்ளி, கொண்டப்பநாயனப்பள்ளி உள்ளிட்ட 21 பஞ்சாயத்துகளுக்கு நேரில் சென்று, பொதுமக்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் படேதலாவ் கால்வாய் இணைப்பு செய்து, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்று சேர நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.

இந்த பிரச்சார பயணத்தின் போது, அவருடன், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி.யுமான சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், நிர்வாகிகள் சவுந்தரபாண்டியன், தளபதிகோவிந்தராஜ், பாலன், பார்த்தீபன், மாதப்பன், முரளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்