சாலையோரம் பட்டுபோன மரங்கள்: உடனடியாக அகற்றலாமே
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சுற்றுவட்டார பகுகளில் உள்ள சாலையின் இரண்டு பக்கமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இவற்றை நட்டு வைத்து, 80 ஆண்டுகள் கடந்துள்ளன.
இதனால் பல மரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால், பட்டுப்போய் காய்ந்துள்ளன. பல சமயங்களில் இந்த பட்டுப்போன மரங்கள் பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் ஆனந்த நகர் அருகில் சாலையோரம் உள்ள புளியமரம் ஒன்று பட்டுப்போய் மிகவும் காய்ந்துள்ளது. இந்த மரம் கரையான் அரித்து மிகவும் பலவீனமாக உள்ளது.
தற்போது அதிக அளவில் காற்றடிப்பதாலும், அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுவதாலும், இந்த மரம் எந்த நேரத்திலும் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தையும், பட்டுப்போயுள்ள இதர மரங்களை உடனே அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu