பர்கூர் அருகே ஊராட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்

பர்கூர் அருகே ஊராட்சித்தலைவர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்
X

பர்கூர் அருகே  முறைகேடு செய்யும் ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

பர்கூர் அருகே போலி பில் தயார் செய்து பல லட்சம் ரூபாய் அபகரிப்பதாக ஊராட்சித் தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்மனு

பர்கூர் அருகே போலி பில் தயார் செய்து பல லட்சம் ரூபாய் அபகரிப்பதாக ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டப்ப நாயக்கர் பள்ளி ஊராட்சியை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானுரெட்டியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து, கொண்டப்பநாயக்கர் பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் மாது என்கின்ற மாதவன் தெரிவிக்கையில், மேற்கண்ட ஊராட்சியில் 9-வார்டு உறுப்பினர்கள் உள்ளோம். ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சார்ந்த மதிவாணன் என்பவர் உள்ளார்..இவர் கடந்த 2.வருடமாக ஊராட்சிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. நாங்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டால் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி எங்களை கடுமையாக திட்டுகிறார்

பொதுமக்கள் இவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டால் 50 வீடுகளை வைத்துக்கொண்டு ஐம்பது முறை வருவீர்களா போங்கடா என தரக்குறைவாக பேசுகிறார்.மேலும் கடந்த ஒரு வருடத்தில் 30- லட்ச ரூபாய்க்கு காண பணிகள் செய்ததாக 30 லட்ச ரூபாய் பில் போட்டு எடுத்துள்ளார் இதேபோல் ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலி பில் தயார் செய்து பல லட்சத்தை அபகரிப்பு செய்து உள்ளார்.

ஊராட்சியில் உள்ள பகுதிகளுக்கு 300 டிராக்டர்களில் தண்ணீர் வினியோகம் செய்ததாக கூறி 5- லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு முறைகேடு செய்துள்ளார். இதேபோல் ஊராட்சியில் செய்யாத வேலைக்கு செய்ததுபோல் பில் தயார் செய்து பல லட்சம் பணத்தை இவர் எடுத்துள்ளார். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.

எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை செய்து இவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!