கிருஷ்ணகிரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆலோசனை

கிருஷ்ணகிரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆலோசனை
X
கிருஷ்ணகிரியில் மாவட்ட அதிகாரிகளுடன், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குழந்தை காப்பகங்களை ஆய்வு செய்தார். முதலில் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் உள்ள 10 குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து கிருஷ்ணகிரி, பர்கூர் தாலுகாவில் 6 குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் உரிமம் பெற்ற குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுடனும் சந்திப்பு நடந்தது.

பின்னர் ஆணைய உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலகத்தில் அலுவலர்களோடு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலகத்தில் அதன் தலைவர் கலைவாணி மற்றும் உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஏடிஎஸ்பி ராஜூ, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் அலுவலர்கள் சுபாஷ், கஸ்தூரி ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து ஆணைய உறுப்பினர் ராமராஜ் கூறுகையில், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்றும், லோக்ஆயுக்தா சட்டம் வலுப்படுத்தப்படும் என்றும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. சேவை உரிமை சட்டம் வருமானால் குழந்தைகளின் உரிமைகளை பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். லோக்ஆயுக்தா சட்டம் வலுப்படுத்தப்படும் போது குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் சிறந்த நிர்வாகம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story