சாமை சாகுபடி விவசாயிகளுக்கு விதைகள், உயிர் உரங்கள் வழங்கல்
கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். வேளாண்மை அறிவியல் மையம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல் படி புதிய வேளாண்மை சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில், முதன்மை செயல் விளக்க திட்டங்களை, விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, பர்கூர் அடுத்த இந்திரா நகரில் சாமை பயிரில் முதன்மை செயல் விளக்கத்திடல் செயலபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி சாமை சாகுபடி செய்யும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிய சாமை ஏ.டி.எல்.பு ரகம் விதையும், உயிர் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இந்திரா நகர் கிராமத்தில் நடந்தது.
இதில், வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் முதன்மை செயல் விளக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி, தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சாமை விதை மற்றும் உயிர் உரங்களை வழங்கினார். வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார் (வேளாண்மை விரிவாக்கம்) உயிர் உரத்தின் பயன்பாடு மற்றும் மண் பரிசோதனையின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.
வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுனர் உதயன் (உழவியல்) முதன்மை செயல் விளக்கத்தில் பின்பற்றப்படும் சாகுபடி தொழில் நுட்பங்களை எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்திரா நகர கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu