பர்கூர்: கேட்பாரற்று கிடந்த 32 இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய போலீசார்

பர்கூர்: கேட்பாரற்று கிடந்த 32  இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய போலீசார்
X

பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் கேட்பாரற்று கிடந்த 32 இருசக்கர வாகனங்களை, போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். 

பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் கேட்பாரற்று கிடந்த 32 இருசக்கர வாகனங்களை, போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் எஸ்ஐ சங்கரன் மற்றும் போலீசார், பர்கூர் & ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதிவு எண் இல்லாமலும், சந்தேகத்திற்கிடமாகவும் நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். இதே போல் கந்திகுப்பம் எஸ்ஐ. ராஜாமணி மற்றும் போலீசார் வரட்டனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஏரிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

நாகரசம்பட்டி எஸ்ஐ பச்சமுத்து மற்றும் போலீசார் நாகரசம்பட்டி ஏரிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். பாரூர் எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார், கீழ்குப்பம் பகுதியில் 3 இருசக்கர வாகனங்களையும், போச்சம்பள்ளி எஸ்ஐ மகேந்திரன் மற்றும் போலீசார், பஸ் ஸ்டேண்டு அருகில் உள்ள சந்தை மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்களையும் என, ஒரேநாளில் 32 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture