பர்கூரில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

பர்கூரில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி, பர்கூர் தூய்மை இயக்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் தூய்மை பணியாளர்கள், தூய்மை இயக்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன் தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் வாரச்சந்தை, டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் ரோடு, ஜெகதேவி ரோடு, சின்னபர்கூர், திருப்பத்தூர் கூட் ரோடு, தாலுகா அலுவலகம் வழியாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் வாக்காளர் உறுதிமொழியை ஏற்று கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!