பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2021-&22ம் ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டிற்க்கான காலியிடங்களுக்கு இன இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி மின்சார பணியாளர், கணினி இயக்குநர், கைவினைஞர், உணவு தயாரித்தல், ஆகிய தொழிற்பயிற்சிக்கு சேர்க்கை நடைபெறுகிறது. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 40 வயது வரை உள்ள ஆண்கள், விடுதி வசதி உள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை krishnagiri.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன், மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், விண்ணப்பக்கும் மாணவர் மற்றும் அவர்களது பெற்றோரின் ஆதார் நகல்களை இணைக்க வேண்டும். குறிப்பாக மாணவர் மற்றும் பெற்றோரின் செல்போன்கள் எண்கள், மின்னஞ்சல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் வருகிற 28ம் தேதிக்குள் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04343&265652 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture