போச்சம்பள்ளி அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சாவு

போச்சம்பள்ளி அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சாவு
X

பைல் படம்.

போச்சம்பள்ளி அருகே சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மலையாண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். 60 வயது கூலி தொழிலாளியான இவருக்கு சொந்தமான சைக்கிளில் தர்மபுரி- மத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. பின்னர் தொடர்ந்து அருகே மொபைட் வாகனத்தில் வந்த வெளக்கலப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் சைக்கிளில் வந்த சிங்காரம் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் வெங்கடேஷ் படுகாயங்களுடன் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!