நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்: வேளாண் விஞ்ஞானி அறிவுரை

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்:  வேளாண் விஞ்ஞானி அறிவுரை
X

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் குறித்து ஆய்வு செய்த, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுந்தர்ராஜ்.

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீதோஷ்ண நிலையில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் பரவலாக தென்படுகிறது.

இலைக்கருகல் நோயானது தூர்கட்டும் மற்றும் கதிர்பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும். இலைகளின் நுனிப்பகுதியில் இருந்து மஞ்சள் அல்லது வெளிரியா மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும். பாதிப்பு இலையின் இரு ஓரங்களிலும் காணப்படும். நரம்பினை ஒட்டி பெருகி, பாதிப்பினால் இலை முழுவதும் காய்ந்துவிடும். நோயானது விதை, பாசன நீர், மழைத்தூறல் மற்றும் இலைகள் உரசுதல் மூலம் பரவுகிறது.

இந்நோயினைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ஸ்ட்ரேப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்கிளின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு புசு50 கிராம் மருந்தை கலந்து தெளிக்கலாம். நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் 15 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பாக்டீரியா இலைக்கருகல் நோய் கட்டுப்படுத்த முடியும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் மையத்தினை, 9443888644, எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil