பர்கூரில் அதிமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

பர்கூரில் அதிமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
X

பர்கூரில், அதிமுக ஒன்றிய கழக அலுவலகத்தை, முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக ஒன்றிய அலுவலகத்தை, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், ஒருங்கிணைந்த அதிமுக ஒன்றிய அலுவலகம் திறப்புவிழா, பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன் உள்ள புதிய கட்டடத்தில் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, வாழைத்தோரணம் அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த புதிய அலுவலகத்தை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள், சிட்டி ஜெகதீசன், மாதையன், வெற்றிச்செல்வன், ராமு, கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture