பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் படுகாயம்

பைக்  மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் படுகாயம்
X
கந்திகுப்பம் அருகே பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம்.


கந்திகுப்பம் அருகே பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனபள்ளி அடுத்த பெரியமட்டாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருக்கு சொந்தமான பைக்கில் உறவினர் கோவிந்தராஜ் என்பவருடன் கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தார். மாதனகுப்பம் அருகே போனபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இவர்கள் மீது மோதியது.

இதில் பைக்கில் பயணம் செய்த பாண்டியராஜன் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!