மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பத்தமத்தூர் பக்கமுள்ள இதர்புரத்தைச் சேர்ந்தவர் பரத்(24). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி & பர்கூர் சாலையில் கந்திகுப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி பரத் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பரத் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future