வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
X

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட எஸ்பி, பின்னர் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கல்லூரி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போலீசார் என 250க்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தொழில் நுட்பக் கல்லூரியைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 3 சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்றார். அப்போது ஏடிஎஸ்பிக்கள் அன்பு, ராஜூ, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!