கோலப்போட்டி முடிவுகள் விரைவில் வெளிவரும்..! 'கோல அரசி' யார் ?

கோலப்போட்டி முடிவுகள் விரைவில் வெளிவரும்..! கோல அரசி யார் ?
X
இன்ஸ்டாநியூஸ் மற்றும் பென்டகன் நிறுவனம் இணைந்து நடத்திய கோலப்போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இன்ஸ்டாநியூஸ் மற்றும் பென்டகன் நிறுவனம் இணைந்து நடத்திய கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்கள் ஆர்வத்தை கண்டு பூரிப்பு அடைந்துவிட்டோம். ஏராளமான கோலங்கள் ஆன்லைன் மூலமாக வந்துள்ளதால் அவற்றை பிரித்து தரவாரியாக ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

உங்கள் ஆர்வம் எங்களுக்கு புரிகிறது. எப்போது கோலப்போட்டி முடிவுகள் வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறீர்கள். சரியான கோலங்களுக்கு பரிசளிப்பது எங்களது கடமை. அதனால், இன்னும் ஒருவார காலத்தில் கோலங்கள் தர வாரியாக பிரித்து வகைப்படுத்தப்பட்டு, பரிசுக்கு உகந்தவைகள் தேர்வு செய்யப்படவுள்ளன. சிறந்த கோலங்களை தேர்வு செய்ய ஒரு முக்கியஸ்தரை நடுவராக அழைத்து வர உள்ளோம். அவர் முதல் 3 பரிசுக்கான கோலங்கள் மற்றும் 10 ஆறுதல் பரிசு கோலங்களை தேர்வு செய்வார். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம். மகுடம் சூடப்போகும் 'கோல அரசி' யார் என்பது தெரிய வரும். கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags

Next Story
why is ai important to the future