/* */

கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை

எனது மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை என தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமார் தந்தை போஜன் பேட்டி.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை
X

தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3 ம் தேதி தற்கொலை செய்து கொண்ட கோடநாடு எஸ்டேட் கணிணி ஆப்ரேட்டராக பணி புரிந்த தினேஷ்குமார் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று தினேஷ்குமார் தந்தை போஜன் மற்றும் அவரது மனைவி கண்ணகியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று தினேஷின் தங்கை ராதிகாவிடம் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் காலை 11.30 மணி முதல் மதியம் 2.17 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரனைக்கு பிறகு தினேஷின் தந்தை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

தினேஷ் வீட்டில் தான் தற்கொலை செய்து கொண்டார். அன்று நான் பக்கத்து கிராமத்தில் சாவு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது மகன் மயக்க முற்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர். நான் அங்கிருந்து வருவதற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர் அதை தான் போலீசாரிடம் தெரிவித்தேன் . நான் அன்று என்ன தெரிவித்தேனோ, அதைதான் இன்றும் தெரிவித்தேன். யாரிடம் இருந்து அவருக்கு எந்த வித அழுத்தமும் இல்லை. கோடநாடு எஸ்டேட்டிலிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ எந்தவித அழுத்தம் தரப்படவில்லை, அவருக்கு என்ன மன உளைச்சல் என்று எனக்கு தெரியாது. எப்போதும் இருப்பதுபோல்தான் இருந்தான். ஏன தற்கொலை செய்தார் என தெரியவில்லை. பிரேதப்பரிசோதனையில் உள்ள கையெழுத்து உங்களுடையதுதானா என விசாரித்தனர்.

நான் எழுதிக் கொடுத்தார்கள் கையெழுத்து போட்டேன் என்றேன் நேற்று என்னையும் என் மனைவியையும் விசாரணை செய்தனர் இன்று மகளை விசாரணை செய்தனர். மறுபடியும் விசாரிப்பதால், யார் வந்த கேட்டாலும் இதைதான் சொல்லுவோம் என அவர் கூறினார்.

Updated On: 21 Sep 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்