கேரள உருட்டரிசியுடன் சுவையான மதிய உணவு..! நம்ம கம்பத்தில் தாங்க..!
உருட்டரிசியுடன் கூடிய கேரளத்து மதிய உணவு.
kerala food in Cumbum news in tamil, kerala food in Cumbum, Kerala Cuisine, Kerala puttu, Kerala chicken guruma, Kerala Food News, Theni news Today
தமிழகத்தை ஒப்பிடும் போது, கேரளாவில் உணவுகளின் தரமும், சுவையும் மிக, மிக குறைவு தான். தமிழகத்தில் நெல்லை உணவு, மதுரை உணவு, காரைக்குடி உணவு, கொங்கு மண்டல உணவு என பல்வேறு உணவு மண்டலங்களே உள்ளன. ஆனால் கேரளாவில் சாப்பாட்டுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.
ஆனாலும் கேரள புட்டு, கேரள கல் ஆப்பம், கேரள முட்டைக்கிரேவி, கேரள மோர்க்குழம்பு, கேரள புரோட்டோ மற்றும் சுண்டல் கிரேவி போன்ற சில உணவுகளுக்கு தேனி மாவட்டத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. காரணம் தேனி மாவட்டமும், கேரளாவும் வணிக தொடர்பு, விவசாய தொடர்பு மற்றும் வாழ்வியல் முறைகளில் பின்னிப்பிணைந்துள்ளது என்பதே அதற்கான காரணம்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உணவுப்பிரியர்கள் சிலர் இந்த வகை சாப்பாடுகளுக்காகவே கேரளாவிற்கு பயணிப்பது வழக்கமான ஒன்று தான். இதனை உணர்ந்த கேரள வியாபாரிகள் கம்பத்திலேயே ஒரு கடை விரித்து விட்டனர். கூடலுாருக்கும், கம்பத்திற்கும் இடையே எட்டு கி.மீ., துாரம் இடைவெளியின்றி தோட்டங்களும், தோப்புகளும் தான் இருக்கும்.
இங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் முந்திரி தோட்டம் உள்ளது. இந்த இடத்தில் திராட்சைப்பழம் விற்க கடைகள் போட்டனர். தற்போது இந்த இடம் ஒரு மினி சுற்றுலா வளாகமாகவே மாறி விட்டது. இங்கு தான் கேரள ஓட்டலும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சீசன் நேரங்களில் காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களும் உணவு கிடைக்கும். மற்ற நேரங்களில் மதியம், மற்றும் இரவு உணவு மட்டுமே உண்டு.
அதுவும் கேரள உருட்டரிசி சோறும், மோர்க்குழம்பும், தேங்காய் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட முட்டைக்கோஸ், ஆவக்காய் பொறியல், சாம்பார், ரசம், அப்பளத்துடன் மதிய உணவு கிடைக்கிறது. அன்லிமி்ட்டெட் சாப்பாடு நுாறு ரூபாய் மட்டுமே. கேரள உணவுப் பிரியர்கள் இதனை சாப்பிடவே இங்கு வருகின்றனர்.
இதர உணவு கேட்டு வருபவர்களுக்கு சாதாரண பல்வேறு வகை சைவ, அசைவ உணவுகளும் உள்ளன. என்ன தான் தமிழ் சாப்பாடு பற்றி பக்கம், பக்கமாக பெருமை பேசினாலும், கேரள உருட்டரிசி சோறும், மோர்க்குழம்பும் சுண்டியிழுக்கும் சரியான ஒரு காம்பினேஷன் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அடடா.. என்னங்க..வாயில் ஜலம் ஊறுகிறதா..? அப்படியென்றால் ஒருமுறை கம்பத்துக்கு விசிட் அடிங்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu