போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிய வாகன சிக்கியது:ஓட்டுநர் தலைமறைவு
ஆய்வாளர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வாகனம்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கக்கல்பட்டியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் . அந்தப் பகுதி வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி வாகன தணிக்கை செய்ய முயன்றார். அப்போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்தார்.
இந்நிலையில் கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி செல்லும் வேன் பல வந்து செல்கின்றன. இதில் பஞ்சப்பட்டியை சேர்ந்த வாகனம் ஆய்வாளரை இடித்துவிட்டு நிற்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளது என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் முக்கிய அடையாளங்களை கண்டறிந்த போலீசார் அந்த வாகனத்தை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர்.
கரூர் நகர டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்ததில் சிசிடிவி காட்சியை வைத்தும், விபத்து நடந்த நேரத்தை வைத்தும் மேற்கொண்ட விசாரணையில் வேன் என்பதை உறுதிப்படுத்தினர். இதனடிப்படையில் வாகனம் மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனம் தோகமலையை அடுத்த கழுகூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஓட்டுநர் சுரேஷ்குமார் வாகனத்தை நிறுத்திவிட்டு தலைமறைவானதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி செல்லும் அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் தோகமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu