குளித்தலை அருகே டாஸ்மாக் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர்

குளித்தலை அருகே டாஸ்மாக்  பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர்
X

குளித்தலை அருகே தாக்குதல் நடத்தப்பட்ட டாஸ்மாக் பார்.

குளித்தலை அருகே டாஸ்மாக் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் காலனியில் அரசு மதுபான கடை மற்றும் அரசு உரிமை பெற்ற பார் கடை செயல் பட்டு வருகிறது. இந்த பார் கடையை குடமுருட்டி நாகராஜ் என்பவர் உரிய அனுமதியுடன் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நச்சலூரை சேர்ந்த ராஜா, குழுமணியை சேர்ந்த மாற்று திறளாளி முத்து. நெய்தலூரை சேர்ந்த மாற்று திறளாளி பழனிவேல் ஆகியோர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது சேப்ளாப்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 க்கு மேற்பட்ட நபர்கள் மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கி வந்து. பார் கடையில் தின்பண்டம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் குடிமகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பாரில் வேலையில் இருந்த மூவரையும் மதுபாட்டிலால் தாக்கி, அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த திண்பண்டங்கள் கொட்டி சேதம் செய்தனர். மேலும் பாரில் குடிமகன்கள் மது அருந்தும் கட்டைகள். மற்றும் தடுப்புகளை சேதம் செய்தனர்.

இதுகுறித்து பார் உரிமையாளர் நாகராஜ் கொடுத்த தகவலின்படி குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து மூவர் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளை காட்டி தாக்க வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். அங்கு இருந்த பொது மக்கள் பார் உரிமையாளர், பணியாளர்கள் சேர்ந்து அதில் ஒருவரை பிடித்துவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில் அவர் திருச்சி மாவட்டம் போசம் பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் வயது20 என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொண்டு வந்த அரிவாள், இருசக்கர வாகனத்தையும் போலீசார் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து பார் பணியாளர்கள் கொடுத்த புகாரின்படி குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பாரில் வேலை செய்த மூன்று நபர்களை இதே பகுதியை சேர்ந்த நபர்கள் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தி, பார் கொட்டகையை சேதம் செய்தனர். இது குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்