/* */

அரசு காகித ஆலை தொழிலாளி உயிரிழப்பு: சக தொழிலாளர்கள் போராட்டம்!

கரூர் தமிழ்நாடு காகித ஆலை தொழிலாளி கொரோனா தொற்றுக்கு பலியானார். இதனை கண்டித்து சக தொழிலாளர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரசு காகித ஆலை தொழிலாளி உயிரிழப்பு: சக தொழிலாளர்கள் போராட்டம்!
X

சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்தர பணியாளர்களும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கை ஒட்டி தனியார் தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் குமார் என்ற தொழிலாளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த மற்ற தொழிலாளர்கள் இன்று பிற்பகல் பணிக்குச் செல்லாமல் வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் காகித ஆலையிலும் வெகு எளிதாக பரவிவிடும் , எனவே, அரசு விதித்துள்ள கொரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி காகித ஆலையை உற்பத்தியை நிறுத்தி விட்டு தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 15 May 2021 11:21 AM GMT

Related News