அடிமுறை தற்காப்பு கலை போட்டிகளில் குளித்தலை மாணவிகள் சாதனை

அடிமுறை தற்காப்பு கலை போட்டிகளில் குளித்தலை மாணவிகள் சாதனை
X

அடிமுறை தற்காப்பு கலையில் மாநில அளவில் பதக்கம் வென்ற மாணவிகள்.

அடிமுறை தற்காப்பு கலை மாநில அளவிலான போட்டிகளில் குளித்தலை மாணவிகள் 17 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

குளித்தலை அருகே க. பேட்டையை சேர்ந்த வீரா என்பவர் குளித்தலை பகுதியில் அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயிற்றுவித்து வருகிறார். தமிழர்களால் உருவாக்கப்பட்ட போர்கலை, ஒருத்தரை தாக்கவும், தற்காத்துக் கொள்ளவும், விஞ்ஞான ரீதியாக கட்டமைக்கப்பட்டது. இந்த கலை வீர விளையாட்டு அடிமுறை உலக முழுவதும் பல நாடுகளில் கராத்தே, குங்பூ, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் அதிகளவு பரவி வரும் நிலையில் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பிரீத்தா, மருக்ஷியா, சுபிக்ஷா, சஸ்மிதா, சந்தியா, காயத்ரி ஆகிய 6 மாணவிகள் வீரா சிலம்பம் மற்றும் அடிமுறை பயிற்சி கூடத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரயில் 3 வது மாநில அளவிலான நடைபெற்ற சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அடிமுறை போட்டிகளான சுவடு குழு, சுவடு தனித்திறமை, கை போர் சைலாத் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு ஆறு மாணவிகளும் 9 தங்கப் பதக்கத்தையும், 3 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் வென்றுள்ளார்கள். இவர்களுக்கு குளித்தலை பகுதி மக்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!