மகனை காணவில்லை: காவல்நிலையத்தில் தந்தை புகார்

மகனை காணவில்லை: காவல்நிலையத்தில் தந்தை புகார்
X

பைல் படம்.

கீரனூரில் வீட்டிலிருந்த மகனை காணவில்லை என தோகமலை காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் காத்தவராயன் (43). இவருக்கு 23 வயதுடைய அய்யனார் என்ற மகன் உள்ளார். அய்யனார் நாமக்கல்லில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி அன்று மதியம் தனது வீட்டில் இருந்தவர் நாமக்கல் வேலைக்கு செல்வதாக கூறிய மகன் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தோகைமலை காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்ற நிலையில், போலீசார் விசாரணைக்கு பிறகு இன்று வழக்கு பதிந்த தோகைமலை போலீசார் காணாமல் போன அய்யனாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!