கரூர் அருகே தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

கரூர் அருகே  தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்
X

கரூர் கடவூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டை ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் கடவூரில். அரியவகை உயிரினமான தேவாங்குகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டில் இன்று ஆய்வு மேற் கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர் காப்புக்காட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்று அங்குள்ள வாலெறும்பு அருவியை பார்வையிட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வாலெறும்பு அருவியில் வந்த தண்ணீரை குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்த காப்புக்காட்டில் அரியவகை உயிரினமான தேவாங்குகள் உள்ளன. 2016-17 கணக்கெடுப்பின் படி 3,200 தேவாங்குகள் உள்ளன. அதனை பாதுகாக்க இந்த காப்புக்காடு பகுதிகளை சரணாலயமாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும் வனத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் அரிய வகை உயிரினமான தேவாங்குகள் வாழும் பகுதியாக இருக்கக்கூடிய கடவூர் காப்புக்காட்டினை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து ஒரு வருட காலத்திற்குள் சரணாலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!