குளித்தலை அருகே ரவுடி வெட்டி கொலை

குளித்தலை அருகே  ரவுடி வெட்டி கொலை
X

கொலை செய்யப்பட்ட கோபால்.

குளித்தலை அருகே வாழைத்தோட்டத்தில் பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கரூர் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று குளித்தலை அருகேயுள்ள கருப்பத்தூரில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் ரவுடி கோபால் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை காவல் நிலையப் போலீசார் கோபால் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து ரவுடி கோபாலை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!