விஸ்வநாதபுரியில் சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாலை வசதி செய்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இவர்கள் நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்வதற்கு சுமார் 2 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இந்த சாலையை புதுப்பித்து தர வலியுறுத்தி விஸ்வநாதபுரி கிராம மக்கள் பேரூராட்சி முதல் ஆட்சியர் அலுவலகம் வரை மனு அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிராமத்துக்கு செல்லும் சாலை மிக மோசமாக சேறும் சகதியுமாக உள்ளது.
இந்தசாலை வழியாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் சாலை வசதி செய்து தரப்படாததைக் கண்டித்து விஸ்வநாதபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதானப்படுத்தினர். பிரச்சனைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu