சாலை வசதி கோரி மாணவிகள் சாலை மறியல்

சாலை வசதி கோரி மாணவிகள் சாலை மறியல்
X

மேம்பாலம் கட்டித்தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

மழைநீர் வடிகாலாக சாலை பயன்படுவதை தவிர்த்து மேம்பாலம் கட்டத் தர வலியுறுத்தி பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சாலை மறியல்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் பிரிவு அருகே கடந்த சில தினங்களாக மத்திய அரசு திட்டத்தின் கீழ் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கடந்த சில தினங்களாக மழை அதிக அளவில் பெய்த்தால், வடிகால் பாதையையொட்டி, சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், அந்த சாலையை பயன்படுத்துவதில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளும் திரண்டு ரங்கநாதபுரம் பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடி யாக சாலையை சீரமைத்து தர வேண்டும். மழைநீர் தேங்காமல் பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் முழக்கம் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வந்த தோகமலை காவல் நிலையப் போலீசார் மற்றும் தோகமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பாலம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!