குளித்தலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

குளித்தலையில்  மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

குளித்தயில் பெய்த மழையால், சாலையில் மழைநீரும், கழிவு நீரும் கலந்து செல்லும் காட்சி

குளித்தலை நகராட்சி பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், சாலையில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் அவதி

குளித்தலை, மேட்டு மருதூர், தண்ணீர் பள்ளி, தோகைமலை, லாலாபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது,

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரும் கழிவு நீரும் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நின்றும், சில இடங்களில் சாலையில் மழை நீருடன் கலந்து ஓடியது. கழிவு நீர் சென்ற சாலைகளில் பொதுமக்கள் தொற்றுநோய் ஏற்படும் அச்சத்துடனே சென்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர், வாகனங்கள் மழை நீர் தேங்கிய பகுதிகளில் சென்றதால் பழுதடைந்தும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குளித்தலை நகராட்சியில் மழை பெய்யும் காலங்களில் இது போன்ற நிலை இருப்பதாக பலமுறை பொதுமக்கள் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள், மானாவாரி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், தற்பொழுது வாய்க்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் வரும் நிலையில் மழை பெய்ததும் இரட்டை சந்தோசத்தில் விவசாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என மகிழ்ச்சி அடைகின்றனர்.

Tags

Next Story