பொதுக்கிணறு வெட்டியதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு

பொதுக்கிணறு வெட்டியதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கீழவெளியூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் பொதுக்கிணறு வெட்டியதில் ஒருவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு.

கரூர் மாவட்டம் குளித்தலை கீழவெளியூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கரிச்சி கவுண்டர் (84). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி அஞ்சலி என்பவருக்கும் பொதுக்கிணறு வெட்டியது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி கரிச்சி கவுண்டர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, கௌதமன், விஜயகுமார் ஆகிய 3 பேரும் தகாத வார்த்தையால் திட்டி குச்சியால் அடித்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயம்பட்ட கரிச்சி கவுண்டர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஏற்கனவே தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்றுள்ளார். அதனை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் குச்சியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது நேற்று தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!