மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்

மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
X

சாலையில் தேங்கிய தண்ணீர்.

மருதூர் பேரூராட்சியில் பணிக்கம்பட்டியில் முறையான சாலை வசதி இல்லாததால், தேங்கிய மழை்நீரில் பொதுமக்கள் சென்றுவரும் அவலம்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பணிக்கம்பட்டி சந்தை அருகில் உள்ள 13வது வார்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்,

ஆனால் இன்றுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று இரவு பெய்த மழையில் வார்டு பகுதியில் சாலைகளில் மழைநீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பகுதி மக்கள் மழை நீரில் நடந்து சென்று வரும் அவல நிலை உள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் தொற்றுநோய் பரவும் அச்சத்திலேயே பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். சாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story