மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையில் ஆர்பாட்டம்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து  குளித்தலையில் ஆர்பாட்டம்
X

காவிரி ஆற்றில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்.

மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலைய பகுதியில், மேகாதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் நாகராஜன, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!