குளித்தலை: பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு
குளித்தலையில் நடைபெற்ற, பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கரூர் மாவட்டம், குளித்தலையில் தனியார் தொண்டு நிறுவனத்தில் சார்பில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கிராமியம் தொண்டு நிறுவன இயக்குனர் நாராயணன் தலைமையில் வகித்தார். கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ், வங்கிகளில் கடன் பெறும் முறைகள் குறித்தும் சுயவேலைவாய்ப்பு திட்டத்தால் பெரும் பயன்கள் குறித்தும் விளக்க உரையாற்றினார்.
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குனர் பாஸ்கர், கரூர் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் கிரிஷன் ஆகியோர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக கிடைக்கும் மானியம், திட்ட அறிக்கை தயார் செய்தல், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடன் பெற்றவர்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உழவர் பாதுகாப்பு மன்ற அமைப்பாளர் கோபாலதேசிகன், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் முகாமில் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் செய்திருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu