ஈரோட்டில் இருந்து 2 டாங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கரூர் வருகை

ஈரோட்டில் இருந்து  2 டாங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கரூர் வருகை

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க ஈரோட்டில் இருந்து தினமும் இரண்டு டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு பத்தாயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட சேமிப்பு கலனில் சேமிக்கப்பட்டு. தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது அருகிலுள்ள நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகளின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலன் வசதி உள்ளது.

ஈரோட்டில் இருந்து தனியார் நிறுவனம் மூலம் தினசரி 2 டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கலனில் நிரப்பப்பட்டு அங்கிருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு உயிர் காக்கப்படுகிறது.




Tags

Read MoreRead Less
Next Story