தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கக்கோரி சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கக்கோரி சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமானிய மக்கள் நலக்கட்சியினர்.

தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கக்கோரி சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசினை கண்டித்தும், குடியரசுத்தின விழாவில் தமிழக ஊர்தி புறக்கணிப்பினை கண்டித்தும் சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், சாமானிய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, தொடர்ந்து தமிழகத்தினை மத்திய அரசு புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது. தற்போது நடைபெற உள்ள குடியரசுத்தின விழாவில் தமிழகத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மரியாதை செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் சிறப்பு ஊர்தியான டாப்ளோ ஊர்தியினை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆகவே மத்திய அரசு இதனை வலியுறுத்த வேண்டுமென்றும் பேசினார்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், குளித்தலை நகர செயலாளர் தாமோதரன், திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், தொட்டியம் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் பாரம்பரிய வரலாற்றினை அழிக்கும் முயற்சியில், மத்திய அரசு செயல்படுவதாகவும், வரும் 26 ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பங்கேற்கும் டேப்ளோ வாகன ஊர்தியில் தமிழகத்தின் ஊர்தி திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாபெரும் கண்டனத்தினை சாமானிய மக்கள் நல கட்சி தெரிவிப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிவில் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் நகர செயலாளர் தென்னரசு நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!