வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

வடகிழக்கு பருவ மழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
X

குளித்தலையில் மழை, வெள்ள  அபாயத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி.

வடகிழக்கு பருவ மழை எதிரொலியால், மழை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்கும் ஒத்திகை நடைபெற்றது.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முசிறி தீயணைப்பு துறையினர் சார்பாக எதிர்வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் தங்களை மழை வெள்ளத்தில் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது,

நிகழ்ச்சியில் முசிரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முனியப்பன் மற்றும் தீயணைப்பு துறையினர் தீ பிடித்தால் அணைப்பது மற்றும் தண்ணீரில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து எப்படி காப்பாற்றிக்கொள்வது, உள்ளிட்ட பேரிடர் கால பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் குளித்தலை வருவாய் துறையினர் மற்றும் பொது மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!